ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியின் ஆதரவாளர்கள் உருவாக்கிய செயலியை தங்களது வலைதளங்களிலிருந்து நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று ரஷ்யாவின் துமா மாகாண தேர்தல் நடைபெற்றது. எனவே நவால்னியின் ஆதரவாளர்கள் “யுனைட்டட் ரஷ்யா” என்ற நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக திகழும் கட்சியின் வேட்பாளரை தோற்கடிப்பதற்காக செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
அந்த செயலி ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் வலைதளங்களில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஷ்யா அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் நாட்டு தேர்தலில் தலையிடுவதாக கூறி கடும் கண்டனத்தை முன்வைத்துள்ளது.