பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் மூன்று முறை பிரதமராக பதவி ஏற்றவர். அவர் மீது 34 ஆண்டுகால நில ஒதுக்கீடு ஊழல் வழக்கு, லாகூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது. அந்த வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு கடந்த மாதம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கின்ற நவாஸ் ஷெரீப்பின் 3 முகவரிகளும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் நவாஸ் ஷெரீப் லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் மீதான வழக்கு நீதிபதி ஆசாத் அலி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் இல்லை என்று மாதிரி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அகமது கூறினார்.
அதன் பின்னர் நவாஸ் ஷெரீப் ஆறு மாதங்களாக வெளிநாட்டில் இருக்கிறார் என மூத்த தலைவர் அட்டா தரார் உறுதி செய்தார். அரசு தரப்பு சிறப்பு வக்கீல் ஹாரீஸ், நவாஸ் ஷெரீப்பை கைதுசெய்து ஆதர் படுத்துவதற்காக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை உடனடியாக நிறைவேற்றுமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.