Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ்…. விவசாயிகளுக்கு மானியம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்வதால், தமிழ்நாடு நீர்ப்பாசன நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ்‌ 14,84,000 ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 எக்டேர்‌‌ நிலப் பரப்பில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக காய்கறிகளை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு எக்டருக்கு ரூபாய் 20,000 வீதம் 5 எக்டேர் வரை மானியம் ஆனது வழங்கப்படும். மேலும் மானியத்தை பெற விரும்பும் விவசாயிகள் வங்கி சேமிப்பு கணக்கு நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம், கணினி சிட்டா, அடங்கல் மற்றும் குடும்ப அட்டை நகல் போன்றவற்றுடன் வட்டார தோட்டக்கலை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |