அக்னிபத் திட்டத்தின்கீழ், ராணுவத்திற்கு வீரர்களை தேர்வு செய்வதற்கான ஆள்சேர்ப்பு முகாம் வேலூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளியில் நவ., 15 முதல் 25 வரை நடைபெற உள்ளது. இதில் கடலூர், சென்னை, காஞ்சி உள்பட 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர் joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் இன்று முதல் செப்.,3 வரை தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். இவர்களுக்கான அனுமதிச்சீட்டு நவ.,1-ல் வெளியிடப்படும்.
இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், வேலூர் ,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட இளைஞர்கள் பங்கேற்கலாம். இது குறித்த விவரங்களுக்கு சென்னை 600 009 என்ற முகவரியிலோ அல்லது 044-25674924 என்ற எண்ணோ தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.