தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும் மற்றும் திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் ஐப்பசி மாத துலா உற்சவம் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டிற்கான விழா அக்டோபர் மாதம் தொடங்கியது.
தொடர்நது 30 நாட்கள் இதற்கான வழிபாடுகள் மற்றும் நடைமுறைகள் நடைபெற்று வரும். இதற்காக காவிரியில் பக்தர்கள் நீராடி வழிபடும் கடைமுக தீர்த்தவாரி வரும் நவம்பர் 16ஆம் தேதி கடைபிடிக்க உள்ளது. இதற்கு அதிக அளவிலான பக்தர்கள் வருகை இருக்கும் என்பதனால் நவம்பர் 16ஆம் தேதி அன்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 19ஆம் தேதி அன்று வேலை நாளாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.