நாகநாதசுவாமி கோவிலில் சிறப்பாக தேரோட்டம் நடைபெற்று உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் அருகே இருக்கும் பேரையூரில் நாகநாத சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடை பெற்றுள்ளது. அதன்பிறகு சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். மற்றொரு தேரில் பெரியநாயகி அம்பாள் எழுந்தருளி னார்.
அதன்பிறகு மேளதாளம் முழங்க கண்கவர் வாணவேடிக்கைகள் நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கண்டு களித்து மகிழ்ச்சி அடைந்தார்கள். தேரோட்டமானது நான்கு முக்கிய வீதிகளில் நடைபெற்றது. அதன் பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதில் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்கள். அசம்பாவிதம் ஏதும் நடக்கக் கூடாது என போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள் குறிப்பிடத்தக்கது.