வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக நாகப்பட்டினம் , புதுச்சேரி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக நாகப்பட்டினம் , சிவகங்கை மற்றும் புதுச்சேரியில் அடுத்து 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .
இதுபோன்றே கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மட்டும் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது . கடந்த 24 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் , ஒரு சில பகுதிகளில் லேசான மழை பொழிய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.