Categories
மாநில செய்திகள்

நாகர்கோவில் டூ திருவனந்தபுரம் ரயில்…. கொல்லம் வரை நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…..!!!!

ரயில் எண் 06426/ 06425 நாகர்கோவில் ஜங்ஷன் – திருவனந்தபுரம் சென்ட்ரல் முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் (நாளை) 11ஆம் தேதி முதல் கொல்லம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து காலை 6:30 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ட்ரலில் 8:15-க்கு சென்று, 8:20க்கு அங்கிருந்து புறப்படும்.

இதையடுத்து கொல்லத்திற்கு காலை 10:25 மணிக்கு சென்றடையும். மறு மார்க்கத்தில் ரயில் எண் 06427 கொல்லம் ஜங்ஷன்- நாகர்கோவில் ஜங்ஷன் தினசரி முன்திவு இல்லாத சிறப்பு ரயில் 3:25 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும். அதன்பின் திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து மாலை 5:15-க்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துதுள்ளது.

Categories

Tech |