Categories
மாநில செய்திகள்

நாகர்கோவில் – தாம்பரம்… ரயில் பயணிகளுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்…!!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் முதல் தாம்பரம் வரை அந்தியோதயா ரயில் 20 முன்பதிவு இல்லா பெட்டிகளுடன் இயக்கப்பட இருக்கிறது.  இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் வந்து சேரும்.

இந்த ரயில், திருச்சியில் இருந்து காலை 6.10 மணிக்கு கிளம்பி மதியம் 2.20 மணிக்கு வந்து சேருமாறு தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை இதற்கு ஒரு மணி நேரத்துக்கு பின் புறப்படும் இண்டர்சிட்டி ரயில் முந்திச்செல்லும் வகையில் கால அட்டவணை அமைக்கப்பட்டு இருந்தது.

மேலும் அந்தியோதயா ரயில் பயணம் செல்லும் பயணிகள் சாப்பிட உணவு கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இது போன்ற காரணங்களால் இந்த ரயிலின் வேகத்தை அதிகரிக்கவும், கால அட்டவணை மாற்றியமைக்க வேண்டும் என மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அடுத்து வரும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் இந்த ரயிலின் வேகம் அதிகரிக்க படுவதுடன் கால அட்டவணையில் மாற்றம் செய்து சூப்பர் பாஸ்ட் ரயிலாக இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.

அந்த வகையில் மாற்றப்பட்டிருக்கும் கால அட்டவணையில் அடிப்படையில் இந்த ரயில் நாகர்கோவிலுக்கு பிற்பகல் 2 .20 மணிக்கு முன்னதாக 12.50 க்கு வந்து விடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு ரயில் பயணிகள் சங்கங்கள் இடையே அதிகபட்ச வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |