சீனப் பெண் இயேசு வழிபாட்டு முறை குறித்து நாகலாந்து மாநிலத்தில் பாப்டிஸ்ட் சர்ச் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவில் கடந்த 1990ஆம் ஆண்டு பெண் இயேசுவை வணங்கும் வழிபாட்டு முறை நிறுவப்பட்டது. அதன் பெயர் சர்ச் ஆப் சர்வ வல்லமையுள்ள கடவுள் வழிபாட்டு முறையாகும். அதுமட்டுமன்றி சீனாவில் இயேசு ஒரு பெண்ணாக உயிர்த்தெழுப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது சீனாவில் இந்த வழிபாட்டு முறை தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்தப் பெண் இயேசு வழிபாட்டு முறை சீனாவின் அருகே இருக்கின்ற நாகலாந்து மாநிலத்தில் தற்போது பரவிக்கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து நாகலாந்து பாப்டிஸ்ட் சர்ச் கவுன்சில், கிறிஸ்துவ பெரும்பான்மை மாநிலத்தில் அதன் கீழ் இருக்கின்ற அனைத்து பாப்டிஸ்ட் சங்கங்களையும் சீனாவின் கிழக்கு மின்னல் வழிபாட்டிலிருந்து பாதுகாக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த முறை ஏசி மீண்டும் பூமிக்கு வந்துள்ளார் என்பதை கற்பிப்பது மட்டுமல்லாமல் மின்னல் டெங் என்றும் அழைக்கப்படுகின்றது. மேலும் நாகலாந்து உட்பட வட கிழக்கில் வழிபாட்டு முறை இதற்கு முன்னதாகவே ஊடுருவி இருப்பதாக நாகலாந்து பாப்டிஸ்ட் சர்ச் கவுன்சில் நம்புகின்றது. இதுகுறித்து நாகலாந்து பாப்டிஸ்ட் சர்ச் கவுன்சில் பொதுச்செயலாளர் ரேவ் டாக்டர் ஜெல்ஹோ கீஹோ கூறுகையில், ” சீனாவில் இருந்து வந்த சர்வவல்லமையுள்ள கடவுள் தேவாலயம் என்று அழைக்கப்படும் ஒரு வழிபாட்டு முறை குறித்து நான் மிகுந்த அக்கறையுடன் எச்சரிக்கின்றேன். சர்ச் ஆப் சர்வ வல்லமையுள்ள கடவுள் அல்லது கிழக்கு மின்னல் வழிபாட்டு முறை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு, இது கவர்ச்சிகரமானதாக தோன்றுகின்றது.
வழிபாட்டு முறை தவறான செய்திகளை பரப்புவதால் அனைவரையும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். நம்முடைய சபைகளை இத்தகைய தவறான மதத்தில் இருந்து பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இளைஞர் அமைப்பு செயலாளர் விக்குவோரி கூறுகையில், ” அவர்கள் ஏற்கனவே நாகலாந்து மற்றும் வடகிழக்கு இந்தியாவுக்குள் நுழைந்து இருப்பது எங்களுக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் அவற்றில் எங்கே, எத்தனை உள்ளன என்பதை நாங்கள் இன்னும் கண்டறியவில்லை. அவர்கள் அனைவரும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கின்றனர்.
அவர்கள் அனைவரும் மக்களில் குறிப்பாக இளைஞர்களை கவர்ந்து இழுக்க முயற்சி செய்து வருகின்றனர். இந்த வழிபாட்டு முறை சீன மக்களிடம் இருந்து சீனாவில் இருந்து வந்துள்ளது. நாகலாந்து மற்றும் வட கிழக்கில் பலர் அதை பின்பற்றி வருகின்றனர் என்பதை நாங்கள் பொதுவாக அறிந்துள்ளோம். சில நாகர்கள் கூட இருந்து வருகிறார்கள். அதிலும் சிலர் அது என்னவென்று தெரிந்த பிறகும் வெளியே வந்திருக்கிறார்கள். கடந்த மே மாதத்தில் நாகலாந்து பாப்டிஸ்ட் சர்ச் கவுன்சில் முதன்முறையாக இதனை அறிந்து கொண்டது. எங்கள் தேவாலயங்களில் வெவ்வேறு சங்கங்கள் மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்து வருகின்றோம்” என்று அவர் கூறியுள்ளார்.