தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜூனா. இவர் மறைந்த நடிகர் அக்கினேனி ஏ.நாகேஸ்வர ராவின் மகன் ஆவார். நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் மீதும், அவருடைய படங்கள் மீதும், அவருடைய குடும்பத்தின் மீதும் ரசிகர்களுக்கு இன்றளவும் தனி மரியாதை உண்டு. ஆனால் அதே சமயம் அக்கினேனி குடும்பத்தில் உள்ளவர்களின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிவது காலத்தின் முடிவாக இருக்கிறது. நடிகர் வெங்கடேஷின் சகோதரி லட்சுமியை திருமணம் செய்து கொண்ட நாகர்ஜுனா, பின் நடிகை அமலா மீது கொண்ட காதலால் லட்சுமியை விவாகரத்து செய்தார். நாகார்ஜூனா, லட்சுமி தம்பதியினருக்கு பிறந்த மூத்த மகன் மகன் தான் நாக சைதன்யா. கடந்த 2017-ஆம் ஆண்டு நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் திருமணமான நிலையில் தற்போது இருவரும் விவாகரத்து பெற்று பிரித்துள்ளனர்.
மேலும் நாகர்ஜூனா, அமலா தம்பதியினருக்கு பிறந்த அகிலுக்கு ஸ்ரியா பூபால் என்பவருடன் கடந்த சில வருடங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் இறுதியில் இவர்கள் திருமணம் நின்றுவிட்டது. இதேபோல் நாகார்ஜுனாவின் சகோதரி மகன் சுமந்த்துக்கு கீர்த்தி ரெட்டி என்பவருடன் திருமணம் நடைபெற்றதோடு, இரண்டு வருடத்திலேயே இருவரும் பிரிந்துவிட்டனர். இப்படி அக்கினேனி குடும்பத்தில் உள்ள பலருக்கும் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்து வருவதால் இது முன்னோர்கள் இட்ட சாபமாக தோன்றுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.