Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நாகார்ஜுனா படத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அமலா பால்… என்ன காரணம்?…!!!

நாகார்ஜுனா படத்திலிருந்து அமலா பால் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் மைனா படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அமலாபால். இதை தொடர்ந்து இவர் தலைவா, வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில், ராட்சசன் போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடைசியாக இவர் நடிப்பில் ஆடை படம் வெளியாகியிருந்தது.

Amala Paul Demands Huge Remuneration For Lip Lock Nagarjuna The Ghost Movie  Kajal Aggarwal - Telugu Lo-TeluguStop

மேலும் அமலா பால் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிக்கும் புதிய படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இந்த படத்திலிருந்து அமலா பால் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நாகார்ஜுனாவின் வயதை காரணம் காட்டி அதிக சம்பளம் கேட்டதால் அவர் இந்த படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |