Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகையில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 வீடுகள் சரிந்து விழுந்தன!

நாகையில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 வீடுகள் அடுத்தடுத்து சரிந்து விழுந்ததால் பரபரப்பு நிலவுகிறது.

ஏரி குளங்களை ஆக்கிரமித்து வீடு கட்டுவதை சம்மந்தப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் ஏரி மற்றும் குளங்களை ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இதனால் மழை காலங்களில் வீடுகளுக்கும் தண்ணீர் புகும் சம்பவங்கள் நடந்தேறி வருகிறது.

இந்நிலையில் நாகையில் குளத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 8 வீடுகள் அடுத்தடுத்து சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பாராத விதமாக நடைபெற்ற இந்த சம்பவத்தால் வீட்டிலிருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் நீரில் மூழ்கியது. இருப்பினும் வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |