Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“நாகையில் நடைபெற்ற மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி”…. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை….!!!!!

நாகை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சென்ற 25 ஆம் தேதி முதல் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாளை முன்னிட்டு 4 நாட்கள் மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பாக மாநில அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்று வந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்றார்கள். சென்ற 26 ஆம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் மாணவர்கள் பிரிவில் தூத்துக்குடி அணி முதல் இடத்தையும், இரண்டாம் இடத்தை நாகை அணியும், மூன்றாம் இடத்தை மயிலாடுதுறை அணியும் பெற்றது.

மாணவிகள் பிரிவில் முதல் இடத்தை சென்னை அணியும், இரண்டாம் இடத்தை ஆத்தூர் அணியும், மூன்றாம் இடத்தை சேலம் அணியும் பிடித்தது. அதுபோல ஆண்கள் பொது பிரிவில் நடைபெற்ற போட்டியில் முதலிடத்தை நாகை பி அணியும், இரண்டாம் இடத்தை நம்பியார் அணியும், மூன்றாம் இடத்தை நாகை ஏ அணியும் பெற்றது. பெண்கள் பொது பிரிவில் முதல் இடத்தை சென்னை ஏ அணியும், இரண்டாம் இடத்தை சென்னை பி அணியும், மூன்றாம் இடத்தை சீர்காழி அணியும் பெற்றது.

இதில் பள்ளியளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசுக்கு 5,000 ரூபாயும் இரண்டாம் பரிசுக்கு 4.000 ரூபாயும் மூன்றாம் பரிசுக்கு 3,000 ரூபாயும் நான்காம் பரிசுக்கு 2,000 ரூபாய் வழங்கினர். பொது பிரிவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசுக்கு 10,000 ரூபாயும் இரண்டாம் பரிசுக்கு 8,000 ரூபாயும், மூன்றாம் பரிசுக்கு 5,000 ரூபாயும் நான்காம் பரிசுக்கு 2,000 ரூபாயும் வழங்கினர்.

Categories

Tech |