Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகை பொதுமக்கள் ஜாக்கிரதை…. பேருந்து நிலையத்தில் அட்டகாசம் …!!

நாகை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த மக்களை வெறிநாய் கடித்ததில் 18 பேர் காயம் அடைந்தனர், இதனையடுத்து பொதுமக்களை கடித்த வெறி நாயை அங்கிருந்தவர்கள் அடித்துக் கொன்றனர்.

நாகை புதிய பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த வெறிநாய் பேருந்திற்காக காத்திருந்த பொதுமக்களை திடீரென கடிக்க தொடங்கியது. பேருந்து நிலையத்தில் 10க்கும் மேற்பட்டோரை கடித்த வெறிநாய் அங்கிருந்து ஓடியது. செல்லும் வழியெல்லாம் மக்களை கடித்தவாறு சென்ற வெறிநாய் மீண்டும் பேருந்து நிலையத்திலிருந்து கடைக்குள் புகுந்தது.

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் வெறிநாய்யை பிடித்து  கட்டையால் அடித்துக் கொன்றனர். வெறி நாய் கடித்ததில் சிறுவன், பெண்கள், நீதிமன்ற ஊழியர் என 18 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள்  அனைவருக்கும் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Categories

Tech |