கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தியதில் மீனவர் ஒருவர் வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறை சேர்ந்தவர் பாரதிதாசன். இவருக்கு சொந்தமான பைபர் படகில் பாரதிதாசனும் அதே ஊரைச் சேர்ந்த பொற்செல்வன், சிறுதலைக்காட்டை சேர்ந்த ஐயப்பன், ராமச்சந்திரன் ஆகிய 4 பேரும் மதியம் மீன்பிடிக்க சென்று உள்ளனர்.இவர்கள் தமிழக கடற்கரை பகுதியில் சுமார் ஏழு நாடில்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அருகில் வந்த இலங்கை மீனவர்கள் பாரதிதாசனை அரிவாளால் வெட்டியுள்ளனர் மற்ற 3 மீனவர்களையும் தாக்கியுள்ளனர்.
காயமடைந்த மீனவர்கள் கரைக்கு வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆறுகாட்டுத்துறை மீனவர்களை இலங்கை மீனவர்கள் தாக்கிய விவகாரம் மீனவ கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.