தயிர் சேமியா செய்ய தேவையான பொருள்கள்:
சேமியா -2 கப்
தண்ணீர் -2 டம்ளர்
முந்திரிப்பருப்பு – 6
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 6
கருவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு ,கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, முந்திரி பருப்புஆகியவை போட்டு தாளித்து பொன் நிறத்தில் சிவக்கும் வதக்கவும்.
இவற்றுடன் நறுக்கிய பச்சை மிளகாய் கடலைப்பருப்பு போட்டு வதக்கி தண்ணிர் ஊற்றி சிறிது உப்பு போட்டு கிளறவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் சேமியாவை சேர்த்து மேலும் கொதிக்க விடவும் .
சேமியா நன்றாக வெந்ததும் இறக்கி ஆற வைக்கவும். அதனுடன் தயிர் சேர்த்து நன்கு கிளறி தளர்த்தியாக செய்து கொள்ளவும்.
கொத்தமல்லி தழையை தூவி சூடான தயிர் சேமியாவை பறிமாறலாம். அதனை எலுமிச்சை ஊறுகாவுடன் சேர்த்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும்.