நடிகை சமந்தா நாக சைதன்யாவின் முதல் மனைவி குறித்து பேசிய வீடியோ தற்போது மீண்டும் வைரலாக பரவி வருகிறது.
இந்திய திரைப்பட நடிகைகளில் முன்னணியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் வாழ்க்கையில் ஏற்பட்ட சில முரண்பாடுகளால் கடந்து 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி விவகாரத்து குறித்து அறிவிப்பு வெளியிட்டனர்.
இந்த நிலையில் இதற்கு முன் நடிகை லக்ஷ்மி மஞ்சு தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் சமந்தா பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் சமந்தா கூறியதாவது, எங்கள் படுக்கை அறையில் இருக்கும் ஒன்றுடன் நாக சைதன்யாவுக்கு திருமணமாகிவிட்டது.
அது என்ன என்று அந்த தொகுப்பாளர் கேட்டார். அதற்கு சமந்தா, தலையணைக்கும், நாகசைதன்யாக்கும் திருமணம் ஆகிவிட்டது. அதுதான் அவரின் முதல் மனைவி, நாங்கள் கட்டிப்பிடிக்கும் போது கூட தலையணையை இடையே வைத்திருப்பார் என்று கூறிய சமந்தா இதை பொது நிகழ்ச்சியில் கூறியதற்காக அவர் என்னைக் கொல்லப் போகிறார் என்று கூறியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.