நாக சைதன்யாவுடன் சேர்ந்து வாழ்ந்த பொழுது விவாகரத்து பற்றி ஜோக்கடித்து சமந்தா பேசியது தற்பொழுது பேசப்பட்டு வருகின்றது.
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் நடிகை சமந்தா சினிமா திரையுலகில் அறிமுகமானார். பின்னர் விஜய் நடிப்பில் கத்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். நாக சைதன்யாவை 2017 ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிக்க மாட்டேன் என கூறி வந்தார். இருப்பினும் அவர் படங்களில் தொடர்ந்து நடித்தார். சமந்தா திரைப்படங்களில் கவர்ச்சி அதிகமாக நடித்ததால் நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டு வந்தது. அதை உண்மையாக்கும் வகையில் சென்ற வருடம் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
விவாகரத்திற்கு பின்னர் சமந்தா மிகவும் கவர்ச்சியாக நடித்து வருகின்றார். இந்த நிலையில் சமந்தா நாக சைத்தன்யாவுடன் சேர்ந்து வாழ்ந்த போது விவாகரத்து பற்றி காமெடியாக பேசியது இப்பொழுது பேசப்பட்டு வருகின்றது. இணையத்தில் ரசிகர் ஒருவர் கணவரை விவாகரத்து செய்து விட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். அதற்கு பதில் அளித்த சமந்தா கஷ்டம். ஒரு வேலை செய்யுங்கள், நீங்களே நாக சைத்தன்யாவிடம் கேளுங்களேன் எனக் கூறினார். நாக சைத்தன்யாவை பிரியும் நாள் வரும் என்பது தெரியாமல் சமந்தா பேசியிருக்கின்றாரே என ரசிகர்கள் கூறுகின்றார்கள்.