சமந்தாவும் நாக சைதன்யாவும் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு வாய்ப்பில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றார்கள்.
பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹர் காபி வித் கரண் 7 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த நிலையில் இந்நிகழ்ச்சியில் சமந்தா மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கலந்து கொண்டார்கள். அப்பொழுது சமந்தாவிடம் கரண் தன் காதல் கணவர் நாக சைத்தன்யாவை பிரிந்தது குறித்து பேசினார்.
உங்களின் கணவர் நாக சைதன்யா என கரண் கூறினார். அதற்கு சமந்தா நாக சைதன்யா கணவர் இல்லை, முன்னாள் கணவர் என திருத்தம் செய்தார். சமந்தாவும் நாக சைத்தன்யாவும் மீண்டும் சேர்ந்து விடுவார்கள் என ரசிகர்கள் நம்பி வந்த நிலையில் சமந்தா இப்படி சொன்னதை கேட்ட ரசிகர்கள் இனி இருவரும் சேருவார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறி வருகின்றார்கள்.