Categories
மாநில செய்திகள்

நாக தோஷம் கழிக்க ஆசிரமத்திற்கு சென்ற மாணவி….. சாமியாரின் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

திருவள்ளூவர் செம்பேடு கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு நாகதோஷம் இருந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் சொன்னதை கேட்டு மாணவியை அவரது தந்தை பிப்ரவரி 13ஆம் தேதி வெள்ளாத்துக்கோட்டை பகுதியில் உள்ள ஆசிரமத்திற்கு பரிகாரத்திற்காக அழைத்துச் சென்றார். அப்போது சாமியார் முனுசாமி மாணவி இரவு முழுவது இங்கு தங்கி பூஜை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவி நள்ளிரவு பூஜைக்கு அந்த ஆசிரமத்தில் தங்கியிருந்தார்.

அதன்பிறகு நள்ளிரவு பூஜை முடிந்ததும் வீட்டுக்கு வந்த மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சிபிசிஐடி நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதாவது, நள்ளிரவு பூஜைக்காக ஆசிரமம் சென்ற மாணவியை சாமியார் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்துள்ளார் என்று தெரியவந்தது. இதனையடுத்து சாமியார் முனுசாமி போலீசார் கைது செய்தனர்.

Categories

Tech |