எங்கள் ஆட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனுக்குடன் நிவாரணம் வழங்குவோம். ஆனால் திமுக ஆட்சியில் பத்து மாதம் ஆனால் கூட நிவாரண உதவி கிடைக்காது என்று ஓ பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் புவனகிரி பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஓபிஎஸ் மற்றும் ஜிபிஎஸ் இருவரும் ஒன்றாக சேர்ந்து பார்வையிட்டனர். மழை வெள்ளத்தால் மூழ்கிய நெல் பயிர்களை பார்வையிட்ட அவர்கள், பின்னர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி, நிவாரண பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் எங்கள் ஆட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நாங்கள் உடனுக்குடன் நிவாரண உதவிகளை வழங்கி விடுவோம். ஆனால் திமுக ஆட்சியில் 10 மாதங்கள் ஆனால் கூட நிவாரண உதவிகள் வழங்க மாட்டார்கள். நாங்கள் தற்போது ஒன்றுபட்டு வந்துள்ளோம் என்று அவர் விமர்சித்துள்ளார்.