Categories
உலக செய்திகள்

நாங்கலாம் மூளக்காரங்கலே…. “போலீசுக்கே டிமிக்கி கொடுத்து”, நைசாக எஸ்சான பெண்…. வலை வீசித் தேடும் பிரபல நாடு…!!

கனடாவில் 2 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை பெற்று கடந்த 16ஆம் தேதி பரோலில் வெளி வந்த பெண்ணொருவர் தலைமறைவாகியுள்ளார்.

கனடாவிலுள்ள nainamo என்னும் பகுதியில் கிராஸ் என்னும் 45 வயதாகின்ற பெண்மணி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை பெற்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி பரோலில் விடுதலையான கிராஸ் ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார். ஆனால் கிராஸ் அந்த வீட்டிலிருந்து வெளியேறி எங்கேயோ தலைமறைவாகியுள்ளார். இதுகுறித்து
தகவலறிந்த காவல்துறை அதிகாரிகள் கிராஸ் விடுதலை நிபந்தனைகளை மீறிய குற்றத்திற்காக மீண்டும் கைது செய்ய வலைவீசி தேடி வருகிறார்கள்.

Categories

Tech |