எங்களுக்கு தேர்தல் அறிக்கையில் காப்பி அடிக்கவேண்டிய அவசியமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் வரலாற்றை புரட்டி பேசினார்.
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் அறிக்கை எது சிறப்பு என சொல்வது, யார் யாரை காப்பி அடித்தார்கள் என சொல்லுவதில் நீதிபதியாக இருப்பது மக்கள். நீ காப்பி கட்சியா ? நாங்க காப்பி கட்சியா ? என்பதை மக்கள் சொல்வார்கள். எங்களை பொருத்தவரை நாங்க யாரையும் காப்பி அடிக்க வேண்டிய எங்களுக்கு அவசியம் இல்லை. ஏன் ஏனென்று சொன்னால்…
சமூக நலத்திட்டம் என்று பார்த்தால் தொன்றுத்தொட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் செய்து கொண்டு இருக்கின்றது. புரட்சி தலைவர் காலத்திலும், அம்மா காலத்திலும் வழங்கி வருகின்றோம். தாலிக்கு தங்கம் திமுக கொண்டு வந்தாங்களா ? அதே போல 2,500 ரூபாய் நாங்க கொடுத்தோம். இதை பார்த்துட்டு திமுக 1000 ரூபாய் சொல்லுது.
எங்களை பொறுத்தவரையில் கடந்த கால உதாரணங்கள் இருக்கு. எவ்வளவு தேர்தல் அறிக்கையில் சொன்னதையெல்லாம் செஞ்சிருக்கோம். அந்த அடிப்படையில் மக்களுக்கு பணியாற்றக்கூடிய வகையில் திட்டங்களை அறிவிக்கின்றோம். உதாரணத்திற்கு சொல்லப்போனால், அம்மா அவர்கள் நிறைய திட்டங்களை பள்ளிக்கூடம் குழந்தைகளுக்கு வழங்கினார்கள். பள்ளி குழந்தைகளுக்கு 16 வகையான பொருட்கள்,
முதியோர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை உயர்த்தி கொடுத்தது. இதெல்லாம் எந்த காலத்தில் நடந்தது ? பெண்களுடைய பணிச் சுமையைக் குறைப்பதற்கு ஏற்ற வகையில் வாஷிங் மெஷின் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல பல விஷயங்களை செய்து வருகின்றோம். மக்களோடு மக்களாக பணியாற்றுகின்ற போது, மக்களுடைய மனநிலைய தெரிந்து அந்த அடிப்படையில் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.