தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள 150 வருடங்கள் பழமையான ஆனைப்புளி பெருக்க மரம் கல்வெட்டை திறந்து வைத்தார். அதன் பின் பேசிய அவர், “வானுயர வள்ளுவருக்கு சிலையும் வைப்போம். லட்சக்கணக்கானவர்கள் பணியாற்ற டைடல் பார்க்கும் வைப்போம். திமுக அரசு ஒருவாரம் மட்டுமே மக்களை கவனிக்கும் அரசு கிடையாது. ஏழை எளிய மக்களை கைதூக்கி விடும் அரசாக இருக்கிறது.
மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலமாக 10 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். குடிசைகளை மாற்றி அடுக்குமாடி கட்டிடங்களாக மாற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் அனைவருடைய கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்கும் திமுக அரசு இருக்கிறது. கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் சுகாதார பணியாளர்கள், சுகாதாரத்துறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.