Categories
உலக செய்திகள்

“நாங்களாம் தாராள மனசு காரங்க”…. இந்தா வச்சுக்கோ…. கடுமையான நெருக்கடியில் இலங்கை… உதவி கரம் நீட்டும் “இந்தியா”….!!

இந்தியன் ஆயில் நிறுவனம் இலங்கைக்கு 40,000 டன் பெட்ரோல், டீசலை வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி சூழல் நிலவி வருகிறது. இவ்வாறு இருக்க எரிபொருள் பற்றாக்குறையினால் அனல் மின் நிலையங்களை இயக்குவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பல முக்கிய நேரங்களில் மின்தடை அமல்படுத்த வேண்டிய சூழலும் உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு துணை நிறுவனமான இலங்கை இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் அந்நாட்டின் மின்சக்தி துறை மந்திரியான காமினி தங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசலை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருக்கும் இலங்கைக்கு சுமார் 40,000 டன் பெட்ரோல், டீசலை வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |