Categories
சினிமா

“நாங்களும் உங்கள மாதிரி இதற்காக வெயிட் பண்றோம்”… கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக விளங்கும் விஜய் “மாஸ்டர்” திரைப்படத்திற்கு பின் நடித்துள்ள திரைப்படம் “பீஸ்ட்” ஆகும். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இப்ப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து இருக்கிறார். இந்த படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அனிருத் இசை அமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தது.
இந்த படத்தில் இடம்பெறும் 2 பாடல்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்து ஹிட் ஆகியது. பீஸ்ட் படத்தின் டிரைலர் வரும் ஏப்ரல் 2 (இன்று) வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது ஒரு பதிவின் வாயிலாக வெளியிட்டுள்ள போட்டோ வைரலாகி வருகிறது. அதில் நாங்களும் உங்கள மாதிரி பீஸ்ட் டிரைலர்க்கு வெயிட்டிங் நண்பா” என்று பதிவிட்டு விஜய் மற்றும் படக்குழு உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |