Categories
உலகசெய்திகள்

“நாங்களும் உதவ போறோம்”…. செயல்படும் நோட்டோ அமைப்பு…. தயார் நிலையில் படைகள்….!!

நோட்டோ அமைப்பு உக்ரைன் நாட்டிற்கு உதவும் வகையில் 8 படை குழுக்களை தயார் நிலையில் வைத்துள்ளது.

உக்ரேனின் அண்டை நாடுகளில் கூடுதல் ராணுவப் படைகள் கொண்ட குழுக்களை நிறுத்த நோட்டோ அமைப்பு முடிவெடுத்துள்ளது.  இது குறித்து நோட்டோ அமைப்பின் செயலாளரான ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் கூரியாதவது ” பால்டிக்கடலில் தொடங்கி கருங்கடல் வரை 8 படை குழுக்களை நிறுத்த வேண்டும் உக்ரைனின் அண்டை நாடுகளில் நிறுத்த உள்ளோம்.

இதனைத்தொடர்ந்து பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா மற்றும் ஸ்லோவேக்கியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு நான்கு படை குழுக்களை அனுப்ப  உள்ளோம்.  ஒரு மாதத்திற்கும் மேல் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைனுக்கு உதவ வேண்டுமென்று நோட்டோ அமைப்பு செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில் ரசாயன நுண்ணுயிர் ஆயுதங்கள் கதிரியக்க மற்றும் அணு ஆயுதங்கள் கைவசம் வைத்துள்ளோம்.  மேலும்  நோட்டோ அமைப்பின் உயர் ராணுவ தளபதி தயார் நிலையில் உள்ளார்” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |