அதிக அளவில் ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 11 மாதங்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். மேலும் ரஷியா உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி தன்னுடன் இணைத்து கொண்டது. தற்போது உக்ரைன் தங்களது பகுதிகளை மீட்கும் பணியில் இறங்கியுள்ளது.
மேலும் இதுகுறித்து உக்ரைன் ஆயுதப்படைகளின் பொது ஊழியர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “இந்த போரில் இதுவரை 97,690 ரஷிய வீரர்கள் எங்கள் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து 3 டாங்கிகள், 6 கவச பாதுகாப்பு வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை ரஷியா இழந்துள்ளது” என அவர் கூறியுள்ளார்.