Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்களும் பழகி இருக்கோம்…! என்ன தெரியும் கமலுக்கு ? செல்லூர் ராஜீ அதிரடி …!!

எம்ஜிஆரின் பெயரைச் சொல்லி கமலஹாசன் அதிமுகவின் தொண்டர்களை பிரித்து அழைத்துச் சென்றுவிட முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை வாடிப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சரை பார்ப்பதில்லை என்று கூறினார். மேலும்
கமல் அவர்களுக்கு நிதி, நிர்வாகம், சட்டமன்றத்தில் நடவடிக்கைகள், அரசின் நடவடிக்கைகள் தெரியாது. அவர் சினிமா கதை வசனம் பேசி பேசி பழகி விட்டார். அவர் சினிமாவிலேயே இருந்ததனால் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. அரசியல் கட்சிகள் இப்பதான் தொடங்கியுள்ளார், வருகின்றார்.

அதில் என்னென்ன சட்ட நுணுக்கங்கள்  இருக்கின்றது என அவர்களுடைய ஆட்களை கூப்பிட்டு விசாரித்துக் கொள்ள வேண்டும். அரசு என்பதை என்ன என்று ? தெரிந்து கொண்டு பேசவேண்டும். நாங்களும் எம்ஜிஆருடன்  பழகியிருக்கின்றோம். கமலுக்கு என்ன தெரியும் ? இப்ப வந்தவுங்களை பற்றி சொல்லுவாரு. புரட்சித்தலைவர் உருவாக்கிய கட்சி இந்த அண்ணா திமுக. கமலஹாசன் எதைச் சொல்லியும் அண்ணா திமுக தொண்டர்களை பிரிக்க முடியாது என அமைச்சர் கூறினார்.

 

Categories

Tech |