பொதுமக்களுக்கு இடையுறு ஏற்படுத்தும் வகையில் நானும் ரவுடி தான் என்று தகராறில் ஈடுபட்ட 3 வாலிபர்களை கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேருந்து நிலையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது பேருந்து நிலையத்தில் 3 வாலிபர்கள் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ‘நாங்களும் ரவுடிதான்’ என்று கூறிக்கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதனை பார்த்த காவல்துறையினர் வாலிபர்களை எச்சரித்து அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளனர்.
ஆனால் அவர்கள் காவல்துறையினரின் பேச்சை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பொதுமக்களை மிரட்டியும், ஆபாச வார்த்தைகள் பேசியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் மூங்கில் பட்டியை சேர்ந்த பாண்டியன், தாழம்பாடியை சேர்ந்த பிரசாந்த், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சொர்ணலிங்கம் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 3 வாலிபர்களையும் கைது செய்துள்ளனர்.