உக்ரைன் நாட்டு பெண்கள் ரஷ்யா தாக்குதலிலிருந்து தங்கள் நாட்டை காப்பாற்ற போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் நாட்டை சேர்க்கும் எதிர்ப்பு வலுத்து வருவதால் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான படைகளை குவித்துள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டை காக்க உக்ரைன் நாட்டு பெண்கள் போர் பயிற்சி பெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து நவீன துப்பாக்கி சுடும் பயிற்சிகளில் சாதாரண பெண்கள் ராணுவ வீரர்களிடம் இருந்து பயிற்சிபெறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வாஷிங்டனில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தினால் ஐரோப்பா மற்றும் உலகின் பிற பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தும் எனவும் இதற்கு மிகப்பெரிய விலையை ரஷ்யா கொடுக்க வேண்டும் எனவும் எச்சரித்தார். மேலும் இதுவரை விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை விட மிகக் கடுமையான தடைகளை நாங்கள் விதிப்போம் என்று கூறியுள்ளார். இந்நிலையில் உக்ரைன் பிரச்சினை அமைதியான முறையில் தீர்க்கப்படும் என்று நம்புவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
As tensions mount between Ukraine and Russia, some Ukrainian women are turning to self-defense classes. Others are turning to prayer https://t.co/QNeewLhAYg pic.twitter.com/mqNkHgi5q5
— Reuters (@Reuters) February 7, 2022