தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் ஆயிரத்து 521 இடங்களில் திமுக கூட்டணி 1145 இடங்களிலும், அதிமுக 214 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 14 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 138 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் முதன் முறையாக உள்ளாட்சித் தேர்தலை
சந்தித்த விஜய் ரசிகர்கள் 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் நாம் தமிழர் கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. எனவே பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், “இது படுதோல்வி எல்லாம் இல்லை. களத்துல நிக்குற நாங்களே இத தோல்விய நினைக்கல. வேடிக்கை பார்த்துட்டு நிக்கற நீங்க ஏன் நினைக்கிறீங்க? என்று கூறியுள்ளார்.