Categories
தேசிய செய்திகள்

நாங்கள் அனுப்பியிருக்க மாட்டோம்’ – கண்கலங்கவைக்கும் வீடியோ …!!

திருப்பூர்-அவினாசி சாலை பேருந்து விபத்தில் உயிரிழந்த ஜோஃபி பால்லின் கண்கலங்கவைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 20ஆம் தேதி பெங்களூருவில் இருந்து கொச்சி நோக்கிச் சென்ற கேரள அரசு சொகுசு பேருந்து திருப்பூர் மாவட்டத்தின் அவினாசி அருகே சரக்கு லாரியுடன் மோதி விபத்தானது.இதில் 19 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 19பேரில் ஒருவரான  கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஜோஃபி பாலு

பெங்களூருவில் உள்ள ஜோய் ஆலுகாஸ் நகைக்கடையில் மேலாளராக பணியாற்றுகின்றார். இதற்கு முன் அவர் பணியாற்றிய மைசூரு கிளையில் இருந்து பெங்களூரு கிளைக்கு மாற்றப்பட்ட போது அவருடன் வேலை செய்த்த சக பணியாளர் இவரை பிரிய மனமின்றி காலில் விழுந்து பிரியா விடை பெற்றனர்.

அப்படி எளிமையாக பழக்கக்கூடிய இவரின் மரண செய்தியை அறிந்த சக பணியாளர்கள்  இப்படியாகும் என்று தெரிந்திருந்தால் நங்கள் அவரை அங்கே அனுப்பியிருக்க மாட்டோம்’ என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மைசூருவிலிருந்து சக ஊழியர்கள் பிரியாவிடை கொடுத்த காணொலி தற்போது சமூக வலைதளத்தில் அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றது.

Categories

Tech |