சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நாங்கள் அமைக்கும் பிரதான அணி தமிழக சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் வெல்லும் என்று கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திரவியபுரத்தில் இன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6 வது பொதுக்குழு கூட்டமானது நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க இக் கட்சியின் தலைவரான சரத்குமார் நேற்று சென்னையில் விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி வந்தார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது:-
கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க வோடு கூட்டணியில் இருந்து வந்த நிலையில் எந்த ஒரு தேர்தலையும் முழுமையாக சந்திக்க முடியவில்லை. எங்கள் கட்சியின் வாக்கு சதவீதமானது மறைந்துபோனது. இதனால் நாங்கள் உருவாக்க உள்ள பிரதான அணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையும் ஏற்படும்.எங்களின் இந்த அணியானது மூன்றாம் அணியாக இருக்காது.
தற்போதைய சூழலில் பிரதான அணியில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வருவதற்கான வாய்ப்பு சாத்தியமில்லை. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான குரல் எதிரொலிக்கபடும். கட்சி நிர்வாகிகளான ராதிகா, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும், என்று கூறினார்.