Categories
உலக செய்திகள்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இது இருக்காது…. ஸ்பெயினில் அறிமுகமாகும் புதிய மசோதா…. அதிரடி முடிவெடுத்த வலதுசாரிகள்…!!

ஸ்பெயின் அரசு இடதுசாரி கட்சிகள் கொண்டு வரும் கருணை கொலை திட்டத்தை அமல்படுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பெயின் நாடானது வரும் ஜூன் மாதம் முதல் கருணைக் கொலை என்ற புதிய திட்டத்தினை கொண்டுவர இருப்பதாக பாராளுமன்றத்தில் கூறியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் தீராத நோயால் கஷ்டப்படுபவர்களை அவர்களின் விருப்பத்தின் பெயரில் கருணைக் கொலை செய்யலாம் என்ற இத்திட்டத்தை இடதுசாரி கட்சிகள் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து கருணை கொலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வலதுசாரி கட்சிகள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டத்தை முழுவதுமாக அகற்றிவிடுவோம் என்று கூறியுள்ளனர். இதனிடையே பாராளுமன்றத்தில் இடதுசாரிகள் கொண்டுவந்த இந்த கருணை கொலை திட்டத்திற்கு ஆதரவாக 202 வாக்குகளும், எதிராக 140 வாக்குகளும் பதிவாகியுள்ளன. மேலும் இதற்கு ஆதரவாக அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதால்  ஸ்பெயின் அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |