Categories
தேசிய செய்திகள்

நாங்கள் இதனை செய்யவில்லை… ஆனால் மோடி அரசு… செய்கிறது… இது மிகப் பெரிய அநீதி… சோனியா காந்தி…!!!

வேளாண் சட்டங்களை மோடி அரசு திரும்ப பெறும் வரையில் விவசாயிகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடும் என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

இன்று கொண்டாடப்பட்டு வருகின்ற காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி ட்விட்டரில் தனது பதிவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கின்றது என்பதை மோடி அரசு உணர்ந்து கட்டாயம் சாப்பிட வேண்டும். காங்கிரஸ் ஆட்சி நாட்டில் நடந்து கொண்டிருந்தபோது விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தாமல் எந்த ஒரு வேளாண் சட்டங்களையும் நாங்கள் அமல் படுத்தியது கிடையாது. ஆனால் மோடி தலைமையில் நடந்து கொண்டிருக்கும் ஆட்சி விவசாயிகளிடம் ஆலோசனை செய்யாமல் முதலாளிகளுக்காக சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது.

வேளாண் சட்டங்களை மோடி அரசு திரும்பப் பெறும் வரையில் காங்கிரஸ் கட்சியில் விவசாயிகளுடன் இணைந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும்.வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடிய வகையில் நாடு முழுவதிலும் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும். அதே சமயத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பஞ்சாபிலிருந்து அக்டோபர் 3 முதல் 5 ஆம் தேதி வரை டெல்லி நோக்கி ராகுல்காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி நடத்தப்பட உள்ளது.அதில் பஞ்சாப் விவசாயிகள் மற்றும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்”என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |