அமெரிக்க வெளியுறவு அமைச்சக சிறப்பு ஆலோசகர் டேரிக் செலட் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ” இந்தியாவின் ஆயுத தேவை மற்றும் தேச பாதுகாப்பு தொடர்பான கூடுதல் பாதுகாப்பு தேவைகளை அளிக்க அமெரிக்கா தயாராக உள்ளது. எதிர்காலத்தில் ரஷ்யா இந்தியாவுடனான நம்பகத்தன்மையான நாடாக இருக்குமா என்பது சந்தேகம்தான். ஏனெனில் தற்போது ரஷ்யா உக்ரைனுடன் போரிட்டு பெரும்பான்மையான ஆயுதங்களை இழந்து விட்டது. அதோடு பல்வேறு நாடுகள் அதன் மீது பொருளாதார தடையை விதித்துள்ளதால் எதிர்காலத்தில் ரஷ்யா தங்களுக்கு தேவையான ஆயுதங்களை தயாரித்து கொள்வதே பெரிய வேலையாக இருக்கும்.
பாதுகாப்பு துறை சார்ந்த சேவைகளை இந்தியாவுடன் சேர்ந்து நிறைவுசெய்ய பைடன் நிறுவனம் ஆர்வமுடன் உள்ளது. ஐநா சபையில் ரஷ்யாவுக்கு எதிராக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காததற்கான காரணத்தை அமெரிக்கா புரிந்து கொள்கிறது. ஏனெனில் இந்தியா ரஷியாவிடம் இருந்து பல வருடங்களாக ஆயுதங்கள் இறக்குமதி செய்து வருகிறது. அந்த காலகட்டத்தில் அமெரிக்கா இந்தியாவிற்கு ஆயுத இறக்குமதி செய்யவில்லை ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது.” என அவர் கூறியுள்ளார்.