Categories
உலக செய்திகள்

நாங்கள் இவரை இளவரசராக ஏற்றுக்கொள்ள மாட்டோம்…. வேல்ஸ் வில்லியம் மீது குற்றம் சாட்டும் கவுன்சில்….!!!!

வில்லியமை  ஒருபோதும் இளவரசராக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கவுன்சில் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் உள்ள நார்த் வேல்ஸில் உள்ள கவுன்சில் ஒன்று  இளவரசராக வில்லியமை ஏற்க முடியாது என அறிவித்துள்ளது. இதுகுறித்து கவுன்சில் கூறியதாவது. பிரித்தானியா ராஜ குடும்பத்தின் உறுப்பினர். ஆனால் பழமைவாதி எனவும், அடக்குமுறைகளில் வழிதோன்றால்  எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் வேல்ஸ் இளவரசர்  என்ற பட்டத்தை நீக்க வேண்டும் எனவும், அந்த கவுன்சில் ஒரு மனதாக வாக்களித்துள்ளது. இந்நிலையில் plaid cym kalamela kurithu council தலைமை குறித்த கவுன்சில் இளவரசர் வில்லியம்  மீது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மேலும் மன்னர் சார்லஸ்க்கு ராணியாரால் வேல்ஸ் இளவரசர்  பட்டம் அளிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கோட்டையில் வைத்து இளவரசர் வில்லியத்திற்கு எதிரான கூட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இளவரசர் வில்லியத்திற்கு  பட்டமளிக்கப்பட்டது தொடர்பில் உறுப்பினர்கள் எவரும் குறிப்பிடப்படவில்லை அது ஏன் என்று தெரியவில்லை.

மேலும் வேல்ஸ்  இளவரசர்  பட்டம் வில்லியத்திற்கு அளிக்கப்பட்டது. இது ஒரு சர்க்கஸ் விளையாட்டு என உறுப்பினர் ஒருவர் கிண்டலடித்துள்ளார். மேலும் தொடர்புடைய கூட்டத்திற்கு வேல்ஸ்  மக்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். இனிமேல் பிரித்தானிய ராஜ குடும்பத்தால்  வேல்ஸ்  இளவரசர் பட்டம் சூட்டப்படுவது அனுமதிக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழும்பியுள்ளது. அதில் இளவரசர் வில்லியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 46 வாக்குகளும், ஆதரவாக நான்கு வாக்குகளும் பதிவாகியுள்ளது. மேலும் வேல்ஸ்  இளவரசர்   பட்டம் என்பது வேல்ஸ் மக்களுக்கு மட்டுமே சொந்தம் என கவுன்சில் உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |