ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை மரண விளிம்பில் இருக்கின்றன. ஏனென்றால் நாங்கள் எங்களது பிரதேசத்தையும் மக்களையும் வர்த்தகம் செய்ய மாட்டோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரில் கடந்த சனிக்கிழமையன்று கிவ் மீது விமானத் தாக்குதல்கள் நடந்துள்ளது. அப்போது போரில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் இறந்த நிலையில், பலர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதேபோன்று உக்ரைனின் தென்கிழக்கு டார்னிட்ஸ்கி மாவட்டத்தில் வெடிச் சத்தம் கேட்டதாகவும், புகை கிளம்பியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதில் குறைந்தபட்சம் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மற்றவர்களைக் காப்பாற்ற டாக்டர்கள் போராடுவதாகவும் நகர மேயர் தெரிவித்துள்ளார். இதனிடையில் உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ், நாட்டின் வடகிழக்கில் குடியிருப்பு மாவட்டத்தில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர் என அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மரியுபோலில் சிக்கியுள்ள கடைசி உக்ரைனிய துருப்புக்களை வெளியேற்றுவதன் வாயிலாக தான் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அத்துடன் தன் அரசாங்கம் பாதுகாவலர்களுடன் தொடர்பில் உள்ளதாக தெரிவித்த ஜெலன்ஸ்கி, மரியுபோலில் ரஷ்யா வேண்டுமென்றே அனைவரையும் அழிக்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார். தெற்கில் பிப்ரவரி 24 அன்று பேரழிவிற்கு உள்ளான நகரமான மரியுபோல், ரஷ்ய துருப்புக்கள் முன்னாள் சோவியத் செயற்கைக்கோள் அரசை ஆக்கிரமித்ததிலிருந்து உக்ரைனின் எதிர்பாராத கடும் எதிர்ப்பின் அடையாளமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.