தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது இதில் பேசிய அக்கட்சியின் முதன்மை துணைப் பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார், தப்பு என்று சொன்னால் எதிர்க்கக்கூடிய தன்மையுள்ள தலைவர் சரத்குமார். அவருக்கு பயம் கிடையாது, அவர் அன்பு ஒன்றுக்கு தான் கட்டுப்படுவார், தலை வணங்குவார். அன்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம். சமத்துவ சொந்தங்கள் நீங்கள் காட்டுகின்ற அன்பை வைத்து சாதிப்போம் என்ற நம்பிக்கையோடு இங்கே இருக்கிறார்.
நிறை நிறைய முடிவுகள் அவர் எடுத்துள்ளார். அதனை விரைவில் அறிவிப்பார். அதையெல்லாம் நீங்கள் மனதில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை மாற்றத்தை கொண்டு வரும் தேர்தல் என்று நான் அடித்துச் சொல்கின்றேன், விடமாட்டோம். நாங்கள் கருவேப்பிலையா ? கொத்தமல்லியா ? விடமாட்டோம்.
தலைவர் அவர்கள் கட்டளை இட்டாள் நான் கண்டிப்பாக இந்த தேர்தலில் நிற்பேன். நிறைய பேரு நான் கோவில்பட்டியில் போட்டியிட வேண்டும் என்றும், வேளச்சேரியில் போட்டியிட வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் கடவுள் என நினைக்கிறார் என்று எனக்கு தெரியாது. எனக்கும் கடவுள் அவர்தானே. அவர் என்ன நினைத்தாலும், அவருக்காக நான் கண்டிப்பாக இந்த தேர்தலில் நிற்பேன். எங்கள் இலக்கு வெற்றி என ராதிகா சரத்குமார் கூறினார்.