Categories
மாநில செய்திகள்

நாங்கள் எப்போதும் brothers தான்…. TTV -யை விரைவில் சந்திப்போம்…. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி….!!!!

ஓ.பன்னீர்செல்வம் இன்று  செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது டிடிவி தினகரன் அதிமுக கூட்டணி அமைத்தால் சேர தயார் என்று கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன். மேலும் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நான் சந்திப்பேன். இதனையடுத்து வரும் 12-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். அப்போது அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தாலும் நாங்கள் சந்திப்போம்.

இந்நிலையில் திமுகவும் அதிமுகவும் எப்பொழுதும் நாங்கள் அண்ணன் தம்பி தான். ஆனால் நாங்கள் மாறுபட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். இந்நிலையில்  எம்ஜிஆர் உருவாக்கிய பாதையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். திமுக அவர்களின் பாதையில் பயணிக்கிறார்கள். இந்நிலையில் அதிமுகவை யாராலும் மிரட்ட முடியாது. மேலும் அதிமுக தலைமையில் பிரச்சனை இருக்கிறது என்ற தோற்றமும் உருவாகியுள்ளது. அந்த பிரச்சனைகள் விரைவில் சரியாகிவிடும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |