Categories
சினிமா தமிழ் சினிமா

நாங்கள் எல்லாரும் போராளி…. எங்களை ஆக்க முடியாது ஏமாளி…. பஞ்ச் பேசி கண்டித்த டி.ஆர் …!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கௌரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபா ஜெயின், துணை தலைவர் கதிரேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டது சட்டதிட்ட விதியின் படி  விதிமீறல் என பதவி நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், கதிரேசன், சந்திரபா ஜெயின் மூன்று பேர் எங்களுக்கு நண்பர்கள்தான்.

குறிப்பாக என்னுடைய நண்பர் சந்திரபா ஜெயின் வசந்த கீதம் படம் என்னையும், என்னுடைய மகன் சிலம்பரசனையும் வைத்து எடுத்தவர். அவர் ஒரு நல்ல பினான்சியர். அவரிடம் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன்… தயவுசெய்து உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகும் நீங்கள் அந்த பதவியில் ஒட்டிகிட்டு இருக்க வேண்டும் என்று நினைப்பது சரியல்ல.  உங்களுடைய கேரியரில் மூன்று பேருக்கும் இது கரும் புள்ளியில்  உள்ள ஒரு குறியீடு. இதை மீறி நீங்கள் போக கூடாது மேல்முறையீடு.

தார்மீக ரீதியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். உங்கள் 3பேர் பதவிக்கும் தடை வந்துள்ளது. இதற்கு மேல் நீங்கள் சங்கத்தில் செயல்பட்டு என்ன செய்யப் போகிறீர்கள் ? அதனால் தார்மீக ரீதியாக நீங்கள் உங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தேர்தலை சந்தியுங்கள். இல்லை என்று சொன்னால் முறைப்படி என்ன செய்ய வேண்டுமோ…. அதை செய்யுங்கள்.

நீங்கள் எத்தனை மேல்முறையீடு செய்தாலும் சரி சந்திக்க ரெடி. நீங்கள் ஒவ்வொன்றிலும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் போராளிகள்…  நாங்கள் போராளி ஆனால் நீங்கள் என்ன நினைத்தாலும் எங்களை ஆக்க முடியாது ஏமாளி. நாங்கள் போராடிக் கொண்டே இருக்கும் போராளி என டி.ராஜேந்திரன் விமர்சித்தார்.

Categories

Tech |