Categories
தேசிய செய்திகள்

நாங்கள் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்துள்ளோம்….. பிரதமர் மோடி புகழாரம்….!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர்களை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

இந்தியா முழுதும் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு டெல்லியில் ஒரு அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் முன்னாள் பிரதமர்களின் புகைப்படங்கள், அவர்களின் வாழ்க்கை வரலாறுகள் குறித்த தகவல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனையடுத்து பிரதமர் மோடி அருங்காட்சியகத்திற்கு சென்று முன்னாள் பிரதமர்களின் புகைப்படங்களையும், வாழ்க்கை வரலாறுகளையும் பார்த்து தெரிந்து கொண்டார். அதன்பின் பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் இந்தியாவில் பதவி வகித்த பெரும்பாலான பிரதமர்கள் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நமது அரசியலமைப்பு சாசனத்தின் சிற்பி டாக்டர் அம்பேத்கர் ஆவார். மத்திய அரசு நம் நாடு முன்னேறுவதற்கான வழிமுறைகளை செய்து வருகிறது. அந்த வகையில் எதிர்கால சந்ததிகளை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது. நமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆன நிலையில் இந்தியா பல்வேறு சவால்களை சந்தித்துள்ளது. இவையெல்லாம் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை. நமது நாட்டின் பிரதமர்கள் அதற்கான பல்வேறு வழிமுறைகளை செய்துள்ளனர். ஒவ்வொருவரும் ஒரு விதமான திறமையை கொண்டுள்ளனர். இவர்கள் மக்கள் மனதில் என்றென்றும் வாழ்வார்கள் எனக் கூறினார்.

Categories

Tech |