ஐகோர்ட் உத்தரவை கண்டித்து முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தகியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்த ஹைகோர்ட் உத்தரவை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பல முஸ்லீம் அமைப்புகள், அவற்றின் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.