திமுக ஒரு அழுகிப்போன தக்காளி, அது கூட்டுக்கு உதவாது குழம்புக்கும் உதவாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் முழங்கை வரை மந்திரித்த கயிறுகள், எப்போதும் மஞ்சள் நிற சட்டை, நெற்றி நிறைய குங்குமம் என அரை சாமியார் ஆகவே மாறிவிட்டார் ராஜேந்திரபாலாஜி. நடுவில் அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட பிறகு ஆன்மீக நடமாட்டம் இரட்டிப்பானது. அதன் பலனாக அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பதவி திரும்பி வழங்கப்பட்டது. அதனால் சில மாதங்கள் சைலண்ட் முடியலையே போய்க்கொண்டிருந்தார். ஆனால் ஆ.ராசா ஜெயலலிதாவும் ஊழல்வாதி, உயிருடன் இருந்திருந்தால் சிறையிலிருந்து இருப்பார் என கூறியது அவரை எரிச்சல்பட வைத்துவிட்டது.
அதனால் ராசா மற்றும் ஸ்டாலினை கடும் கோபத்துடன் விமர்சனம் செய்துள்ளார். ஆனால் அதுபற்றி ஸ்டாலினிடம் கேட்டதற்கு சிம்பிளாக பபூன் என்று கூறிவிட்டார். இதுபற்றி அமைச்சரிடம் கேட்டதற்கு, “நான் கோமாளி அல்ல. ஸ்டாலின் இந்த தேர்தலுக்குப்பின் ஏமாளியாக போகிறார். திமுகவிற்கு சகுனம் சரியில்லை. அதிமுக கைபடாத ரோஜா அல்ல. ஒரு சில தவறுகள் நடக்கலாம். அது தலைவரால் கண்டிக்கப்படும். தவறுகள் திருத்திக் கொள்ளப்படும். ஆனால் திமுக அழுகிப்போன தக்காளி. கூட்டுக்கு உதவாது குழம்புக்கும் உதவாது” என்று விமர்சனம் செய்துள்ளார்.