பள்ளியில் மாணவர்கள் குழுமம் தொடக்க விழா நடைபெற்றுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான்கோட்டை பகுதியில் அமைந்துள்ள செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவர்கள் குழுமம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கல்விக் குடும்பங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத் தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் கே. தனசேகர், தாளாளர் திப்தி தனசேகர் , மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், பள்ளி நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், முதன்மை முதல்வர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் 2022-2023 -ஆம் கல்வி ஆண்டில் தலைமை பொறுப்பில் உள்ள மாணவர்கள் தாங்கள் சிறப்பாக பணியாற்றுவோம் என உறுதிமொழி எடுத்தனர். இதனையடுத்து பள்ளிக்கு 100% வருகை தந்த மாணவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது