Categories
உலக செய்திகள்

நாங்கள் சுமுகமான நட்புறவு கொள்ள தயார்…. உலக நாடுகளுக்கு தலிபான்கள் அழைப்பு….!!!!

ஆப்கானிஸ்தானில் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். இதையடுத்து அங்கிருக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் அலறி அடித்துக்கொண்டு மற்ற நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். இந்நிலையில் அனைத்து நாடுகளுடனும் சுமூகமான நட்புறவு கொள்வதற்கு தாங்கள் விரும்புவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தலிபான் செய்தி தொடர்பாளர் கூறுகையில், புதிய அரசு வெளியுறவுக் கொள்கையின் படி சுமூக உறவையே நாங்கள் நாடுகிறோம்.

எந்த வெளிநாட்டு தூதரக வளாகத்தில் தலிபான்கள் நுழைய மாட்டார்கள். அனைத்து நாடு தூதரகங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும். மேலும் நட்பு நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தலிபான்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வாருங்கள். அமெரிக்கர்கள் 31ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |