வருவாய்த்துறையில் செயலை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக திருப்பூர் மாவட்ட பொது மக்கள் அறிவித்துள்ளனர்.
திருப்பூரிலுள்ள காங்கேயம் வட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் ஊராட்சி குழலிபாளையம் பகுதியை, காங்கேயம் வட்டாட்சியர் சிவகாமி அவர்கள் ஓடை, புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்புகளை 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் நில அளவையாளர் உதவியுடன் நிலஅளவிட்டு பணியை மேற்கொண்டார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வட்டாட்சியரிடம் தகவல் கேட்டபொழுது, அதிகாரிகள் பதில் ஏதும் சொல்லாமல் தங்களது பணியை மட்டும் முடித்துவிட்டு அவ்விடத்தை விட்டு கிளம்பி சென்றனர்.
இதனை குறித்து பொதுமக்களுக்குள் ஒருவர் கூறியதாவது, ” தேர்தல் அறிவித்ததன் காரணமாக நில அளவை பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தோம். வட்டாட்சியர் இந்த கோரிக்கையை ஏற்க வில்லை. இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் நடக்கவுள்ள ஊராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு எடுத்துள்ளோம்” என்று கூறினார். தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக கூறி பேனர்களை கிராம மக்கள் இருவேறு இடங்களில் வைத்துள்ளனர். மக்களின் இந்த அறிவிப்பால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.