செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், அம்மாவினுடைய, புரட்சித்தலைவர் உடைய கட்சி வரலாற்றில் ஒரு கருப்பு தினம் என்று சொல்லலாம், ஏனென்றால் புரட்சித்தலைவர் சந்தியா ஸ்டுடியோவில் பொதுக்குழு கூட்டிய காலத்திலே கேள்விப்பட்டிருக்கிறோம், அதுபோன்ற அம்மாவின் பொதுக்கூட்டம் சிறப்பாக ஒரு சரித்திர நிகழ்வாக இருக்கும்.
சரித்திரத்தில் இது போன்ற ஒரு தவறாக நிகழ்ச்சி தமிழ்நாடு மட்டுமல்ல, உலகத்தில் எந்த ஒரு அரசியல் பொதுக்குழுவை நடக்கக்கூடாத நிகழ்ச்சி நடத்த ஒரு கருப்பு நாளாக இருக்கிறது. தீய சக்தி கருணாநிதி என்று சொல்லி தான் புரட்சித்தலைவர் இந்த இயக்கம் கண்டார். அவருடைய மறைவுக்கு பிறகு அம்மா அவர்கள் அந்த இயக்கத்தை நன்றாக நடத்தி வந்தார்கள்.
அம்மாவின் மறைவிற்குப் பிறகு ஸ்டாலின் வந்து ஆட்சியை பிடித்துக் கொண்டார். ஆனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்கின்ற ஒரு இயக்கம் இருக்கிறது, அவருடைய தொண்டர்கள் இருக்கிறார்கள் வருங்காலத்தில் அம்மாவின் ஆட்சி நடைபெறும், தமிழ்நாட்டில் திமுகவிற்கு சாவு மணி அடிப்போம் என டிடிவி தெரிவித்தார். ஏற்கனவே அதிமுக பொதுக்கூட்டத்தில் திமுகவிற்கு சாவு மணி அடிப்போம் என முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.